(எம்.எஸ்.எம். றசீன்)
பல்வேறு மனிதநேய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற எமது ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியம் இரண்டாம் தடவையாக இன்று(23) சனிக்கிழமை ஏறாவூர் மட்/ அல் அஸ்ஹர் உயர்தர பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று காலை சிறப்பாக ஆரம்பமாகியது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக இவ் இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் ஆதரவோடு நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் அதிகமானோர் ஆர்வத்துடன் வருகை தந்து தங்களது குருதியை தானமாக வழங்கினர்.
“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் ESDA அமைப்பின் தலைவர் M.L.செய்யத் அகமட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகரசபையின் விஷேட ஆணையாளர் MHM.ஹமீம், ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் சமூகசேவை உத்தியோகத்தர் SAC.நஜீமுதீன், ஏறாவூர் பள்ளிவாயல் சம்மேளன தலைவர்.MM.முகைதீன் சேர், ஜமிய்யதுல் உலமா ஏறாவூர் கிளையின் தலைவர் அஷ்ஷேய்க்
AL.சாஜித் ஹுசைன்(பாகவி), கிராம உத்தியோகத்தர் RF.ஸீராஸ், மசூறா குழுவின் தலைவர் அல்ஹாஜ் ரசாக் டைலர், அமைப்பின் ஆலோசகர்களான ஓய்வுபெற்ற அதிபர் றிபாய்தீன்சேர், மற்றும் சிரேஷ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் SM.முபாறக், SM.ஹனீபா (jp)
மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் 169 குருதிக் கொடையாளர்கள் தங்களுடைய குருதியை தானாமாக வழங்கி வைத்தனர்.















