மீண்டும் மகாவெளி கங்கையின் நீர் மட்டம் 5.31 மீற்றர் வரை உயர்ந்துள்ளமையினால் மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை கல்லேல்லயிலிருந்து மன்னம்பிட்டி வரையான பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
இதனிடையே பொலன்னறுவை தொடக்கம் மன்னம்பிட்டி வரை புகையிரத சேவை நேற்று பிரதான வீதியில் பஸ் போக்குவரத்து மேற்கொள்ளக்கூடியதாக இருந்ததனால் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆனால் இன்று (02) மீண்டும் மகாவெளி கங்கை நீர் மட்டம் அதிகரித்ததுடன், வீதியில் பஸ் போக்குவரத்தை நிறுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
அதனால் விசேட புகையிரதப் போக்குவரத்தை இன்று (02) பிற்பகலில் இருந்து மீண்டும் ஆரம்பிப்பதாக புகையிரத நிலைய உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.
அத்துடன் பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவு மூடப்பட்டுள்ளதுடன் மொரகஹகந்த , மின்னேரியா, கவுரேல்ல, நீர்த்தேக்கங்களின்வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.