We ஆசிரியர் நலன்புரி ஒன்றியத்தினுடைய இந்த ஆண்டிற்கான ஒன்று கூடலும் ஆசிரியர் கல்வித்துறையில் 25 வருடங்களை பூர்த்தி செய்த அதிபர் திருவாளர் எம் யோகலிங்கம் , திருமதி வசந்தா தேவி , திருமதி ரோஸ்மேரி ஆகியோரின் வெள்ளி விழா கௌரவிப்பு நிகழ்வுகளும் ,புதிதாக அதிபர் நியமனம் பெற்ற திரு ஆர் சந்திரகுமார் ,திருமதி ரோகிணி சிவச்சந்திரன் ஆகியோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (02/01) கொட்டகலையில் Nonis Hotel ல் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக
ஸ்ரீபாத தேசிய கல்வியக் கல்லூரியினுடைய முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி பொன் சிங்கரத்னம் ஐயா அவர்களோடு கௌரவ விருந்தினராக திருவாளர் சேகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.இந்த நிகழ்வினை we ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் மலர்வண்ணன் மற்றும் விழா ஏற்பாட்டு குழுவினர் திருவாளர் T.ஜெகதீஸ்வரன் திருவாளர் A.பிரேம்நாத் திருவாளர்S. ஆனந்தகுமார் ஆகியோரின் ஒத்துழைப்போடு இடம்பெற்றது.
மேலும் நிகழ்வில் we ஆசிரியர் ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு பற்றியதுடன் இந்த வருடத்திற்கான திட்டமிடல்கள் செயலாளர் மலர்வண்ணன் தலைமையில் சிரேஷ்ட உறுப்பினர்களின் வழிகாட்டல் ஆலோசனையின் படி உத்தேச செயற்பாட்டு விடையங்கள் என்பனவும் கலந்துரையாடப்பட்டன.
















