அமைச்சர் பிரசன்ன ரணதுங்க –
மேல்மாகாண பெருநகரப் பெருந்திட்டம், கிழக்கு மாகாண மூலோபாய சுற்றுலா வலய அபிவிருத்திக்கான பிரதான திட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களை தயாரித்து வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டம் இந்த ஆண்டு நிறைவு பெறும்.
மேல்மாகாண பெருநகரப் பெருந்திட்டம், கிழக்கு மாகாண மூலோபாய சுற்றுலா வலய அபிவிருத்திக்கான பிரதான திட்டம் ஆகிய மூன்று திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான தரவுகளையும் தகவல்களையும் திரட்டுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே உள்ளக கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
மூன்று தொடர்புடைய திட்டங்களைத் தயாரித்த பிறகு, அடையாளம் காணப்பட்ட முக்கிய திட்டங்களுக்கான முதலீட்டு முன்மொழிவுகள் அழைக்கப்படும். முதலீட்டாளர்களிடமிருந்து முதலீட்டு முன்மொழிவுகளை அழைப்பதன் மூலம் நாடு டொலர் முதலீடுகளைப் பெற முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பான திட்டங்களை தயாரிப்பதற்காக அரச அதிகாரிகளிடம் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் (9) பத்தரமுல்லை, செத்சிரிபாய நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் த்லைவர் நிமேஷ் ஹேரத் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேல்மாகாண பிரதேச செயலாளர்கள், மேல்மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக சர்பானா ஜூரோங் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ஆலோசனைச் சேவைகளைப் பெறுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட மூன்று திட்டங்களைத் தயாரிப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் மற்றும் சர்பனா ஜூரோங் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மூன்று ஆலோசனை சேவை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
உத்தேச திட்டத்தின்படி மேல் மாகாணம் பொருளாதார கேந்திர நிலையமாகவும் கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டமும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அம்பாந்தோட்டை பெருநகரப் பகுதிகளுக்கான அம்பாந்தோட்டை பெருநகர அபிவிருத்தித் திட்டம் மெகா பொலிஸ் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. திருகோணமலை பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் நகர அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. திருகோணமலை நகர அபிவிருத்தித் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அது இவ்வருட வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு, முக்கியமாக மேற்கு பிராந்தியங்களில் பெருநகர பிரதான திட்டம் மிகவும் முக்கியமானது. இதன்படி மேல் மாகாணத்தில் 10 பிரதேசங்களுக்கு 13 திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இத் திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு மிகவும் பயனுள்ள திட்டமாக செயல்படுத்தப்படும்.
இதன் பிரகாரம் அங்கு கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தி, பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதியின் அபிவிருத்தி, கொள்ளுப்பிட்டி முதல் வெள்ளவத்தை வரையிலான கடற்பரப்பு அபிவிருத்தி, பொரளை நகர அபிவிருத்தி, பேலியகொடை நகர அபிவிருத்தி, ஏகல நகர அபிவிருத்தி, கடுவெல – மாலபே அபிவிருத்தி, ஹோமாகம நகர அபிவிருத்தித் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
13 திட்டங்களில் முதலில் 4 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.
பல்கலைக்கழகங்கள், விமான நிலைய நகரம், தொழிநுட்ப நகரம் போன்றவை மேல் மாகாணத்தின் அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் வலியுறுத்துகிறார்.
முனீரா அபூபக்கர்
