மலையக தியாகள் தினத்தை முன்னிட்டு
புப்புரஸ்ஸ கந்தலா தோட்ட தியாகிகளனான வீராசாமி மற்றும் வேலாயுதம் ஆகியோரின் நாமத்தில் V.V Online Education நிலையம் 10.01.2024 கந்தலா தோட்ட மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மலையக மக்களின் 200 ஆண்டுகால பூர்த்தியை முன்னிட்டு தியாகளின் நாமத்தை நிலை நிருத்தும் நோக்கில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது
மலையத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் பா.திருஞானம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக அபிவிருத்தி தானத்தின் தலைவர் ஆர்.இரவிராம் அவர்களினதும் நுவரெலியா CCD அமைப்பினதும் ஒருங்கிணைப்பில் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆர்.ரமேஸ் அவர்களின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு திரைநீக்கம் செய்து வைத்தார்.
மேலும் நிகழ்வின் அதிதிகளாக கொட்டகலை ஆசிரியர் கலாச்சாலை விரிவுரையாளர் சற்குருநாதன் தோட்ட பாடசாலை அதிபர் எஸ்.கணபதி அயற்பாடலை அதிபர் ஆர். இராமசீலன் ஆசிரியர் பரமசிவம் தோட்ட தொழிலாளர் மாணவர்களும் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டார்கள்.






