இலங்கை தமிழ் பேசும் சமூகங்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வரும் நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வு 15/01.2023 திங்கள் அன்று யாழ்ப்பாணம் சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவன தலமை அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு அரசடி நூலகத்த்தில் அமைந்துள்ள பிராந்திய பணிமனை ஆகியவற்றில் சிறப்பாக இடம்பெற்றது.
நூலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 19 ஆண்டுகள் பூர்த்தியாகிய நிலையில் 20ஆவது வருடத்தில் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு நேரடி மற்றும் இணையவழி நிகழ்வாக இடம்பெற்றது. பொங்கல் நிகழ்வில் நூலக நிறுவன பணியாளர்கள், ஆளுகை சபை உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
2005ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனம் 5,377,707 பக்கங்களுடன் 147,911 ஆவணங்களை இணைய நூலகமாக ஆவணப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. www.noolaham.org எனும் இணைய இணைப்பின் மூலமாக நூலகத்தினை பார்வையிட முடியும்