இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 1,122 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பை அடுத்ததாகயாழ். மாவட்டத்தில் 1076 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.