மஸ்கெலியா நிருபர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டுமஸ்கெலிய தோட்ட மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள வேலி பகுதியில் இனம் தெரியாதோர் இட்ட வலையில் சிக்கி சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறுத்தை ஒன்று வலையில் சிக்கி இருப்பதை கண்ட பங்களா தோட்டத் தொழிலாளி உடன் நிர்வாக அதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்தார்.
நிர்வாக அதிகாரி நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் அவ் இடத்திற்கு வருகை தர உள்ளதாக மஸ்கெலியா தோட்ட காரியாலய அதிகாரி தெரிவித்தார்.
