Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026

மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

August 12, 2026

சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மீனவர்களை பாதுகாப்பது குறித்து நிதியமைச்சின் அதிகாரிகள் எதுவித புரிதலுமின்றி செயற்படுகின்றனர் – அமைச்சர் மனுஷ நாணயக்கார
இலங்கை

மீனவர்களை பாதுகாப்பது குறித்து நிதியமைச்சின் அதிகாரிகள் எதுவித புரிதலுமின்றி செயற்படுகின்றனர் – அமைச்சர் மனுஷ நாணயக்கார

ThanaBy ThanaJanuary 17, 2024Updated:January 17, 2024No Comments3 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன்பிடித்துறை தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகள் எவ்வித புரிதலும் இன்றி செயற்படுவதாகவும் அதற்கேற்ப மீனவர்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தை இந்த அதிகாரிகளால் தயாரிக்க முடியவில்லை எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு கடற்றொழில் துறை ஆற்றிவரும் பங்களிப்பை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் நிதி அமைச்சின் அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கரு சரு திட்டத்தின் மூலம் மீனவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது திட்டல்கள் தொடரபில் மீவனவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று(17) தொழில் திணைக்கள கேட்போர் கூட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷா நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், காலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் என்ற வகையில், மீன்பிடி தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்கள் தொழிலில் ஈடுபடும் போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் தனக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
கரு சரு திட்டத்தின் மூலம் இந்த நாட்டின் தொழிலாளிகள் அனைவருக்கும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் வழங்க உள்ளோம் . உலகின் எனையே நாடுகளில் மீனவர்
நீர் குழாய் பொருத்தினர்,வைத்தியர் மற்றும் பொறியலாளர் என வேறுபட்டியின்றி அனைவரும் சமூகத்தில் சலுகைகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் . அவர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான கௌரவம் அளிக்கப்படுகிறது.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் தொழிலாளிகளின் சம்பளத்தில் வித்தியாசம் உள்ள போதும் எந்தொரு நபரின் அங்கீகாரமும் கௌரவமும் மாற்றமடையாது.
எனவே அந்த நாடுகளில் எல்லா வேலைகளும் கௌரவத்துக்குரியதாகவே கருதப்படுகிறது.

எமது நாட்டில் கட்சிகள், இனங்கள், சாதிகள், என தொழிற்சங்க ரீதியாகப் தனித் தனி பலன்களை பெற்றுக்கொளவதற்காகவே இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளதால் மீனவர்களையும் தோட்டத் தொழிலாளிகளையும் தாழ்த்தப்பட்ட நிலையில் வைத்து அவர்களுக்கான கௌரவம் வழங்கப்படாதுள்ளது .

நாட்டின் முறைசார் துறையில் அனைத்தது தொழிலாளர்களுக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு எமது அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

நாட்டில் 25 இலட்சம் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் பொருளாதாரத்திற்கு 60ஈலட்சம் பேர் பங்களிக்கின்றனர். அந்த மக்களில் நீங்களும் இருக்கிறீர்கள். ஆனால் இந்த மீனவ சமூகத்தை பாதுகாக்க எந்தொரு முறையான திட்டமும் இல்லை.

இந்த 60 லட்சம் பேருக்கு கௌரவத்தையும் , பாதுகாப்பையும் அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் .

விசேடமாக தன் கையில் பணப் புழக்கம் இல்லாத சந்தர்ப்பங்களில் கைகொடுக்கும் ஆயுதமாகவே நாம் இந்த ‘கருசரு’ வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

தொழிலாளர் சட்டத்தை மாற்றி தொழில் பாதுகாப்பு சட்டம் அமைத்து அதில் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதன் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பையும் கௌரவத்தையும் பெற்றுக்கொடுப்போம்.

மீனவர்கள் வேலை செய்ய முடியாத நிலையில், வேலையிழந்த நிலையில் இவர்களை கவனித்துக் கொள்ளும் கட்டமைப்பை உருவாக்கவே நாம் இந்த பணியை செய்து வருகிறோம்.

மூன்று மாதங்களுக்குள் நாட்டின் சகல தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது தொடர்பான அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நாம் உறுதியளித்திருந்தோம்.

அதன் மூலம் விவசாயக் காப்புறுதி, உழவர் காப்புறுதி, தொழிலாளர் சேமலாப நிதியம்,ஊழியர் நம்பிக்கை நிதியம் போற்ற அனைத்து விதமான நிதிகளையும் திரட்டி அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான முன்மொழிவு நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

55 வயதுக்கு பிறகு நீங்களும் ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதியம் போன்ற பொருளாதார நிதிகளைப் பெற முடியும். வேண்டுமானால் ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம். இது நாடு தழுவிய திட்டமாகும்.

இனிமேல் மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் கடலுக்கு செல்ல அனுமதி பாத்திரம் வழங்கப்படாது .கடலுக்கு செல்பவர்கள் தங்களை காப்புறுதி செய்துகொள்ள வேண்டும், மேலும் இந்த காப்புறுதி பல்வேறு நிறுவனங்களால் செய்யப்படுகிறது. ஆனால் படகு பழுதாகி மக்கள் அனைவரும் உயிர் இழந்தால் மட்டுமே காப்புறுதி செலுத்தப்படுகிறது.இதில் பல குழப்பங்கள் உள்ளன.

இந்த விடயங்யகள் எமது அமைச்சுடன் தொடர்புடையவை அல்ல. மீன்பிடி அமைச்சு தொடர்பான விடயங்கள். ஆனால் உங்கள் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் தேவையானதை நாங்கள் செய்கிறோம்.

உலகில் உள்ள மற்ற மீனவர்கள் மீன்பிடிக்கும்போது பயன்படுத்தும் பாதுகாப்புக் கருவிகளைப் நாம் பயன்படுத்துகிறோமா?அவ்வாறு பயணத்துவதனால் எமது விபத்துகளை வெகுவாகக் குறைக்கலாம்.இவற்றை சட்டங்களாக முன்வைக்க இருக்கிறோம்.சில சமயங்களில் நாங்கள் உங்களைச் சிக்கலில் சிக்க வைக்க முயல்வது போன்ற உணர்வு ஏற்படும்.ஏனைய நிறுவனங்களுடன் பேசி முரண்பாடின்றி இவற்றை மேற்கொள்ள முயன்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை!

    August 11, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026
    Editors Picks

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.