மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.18.01.2024.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில் குரூப் மஸ்கெலியா தோட்டத்தில் வன விலங்குகளுக்கு இடப்பட்டிருந்த வலையில் சிக்கிய சிறுத்தையை உயிருடன் மீட்டு மதியம் 3 மணியளவில் ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள வேலி பகுதியில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை மயக்க ஊசி ஏற்றுவதுதற்கு ரந்தெனிகல மிருக வைத்தியசாலையில் இருந்து மிருக வைத்திய அதிகாரி அக்கலஸ் பினிடியர் என்ற வைத்தியர் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்து கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை க்கு மயக்க ஊசி ஏற்றப் பட்டு பாதுகாப்பான முறையில் கம்பிகள் மூலம் செய்யப்பட்ட கூண்டில் இட்டு ரந்தெனிகல மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டது.
சிறுத்தையின் காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சைக்காக ரந்தெனிகல கொண்டு செல்லப்பட்டது என்று நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
இன்று காலை முதல் அப்பகுதியில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிசார் வன பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

