இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய, தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்ஜிஜன் கலங்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்கிறதா என மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணர் தற்போது புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அறிவிக்கையில், இந்தியாவில் கடந்த மே 27 ஆம் திகதியில் இருந்து ஒரு வாரத்திற்கு 15 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஜூன் 4 ஆம் திகதி 21 ஆயிரத்தித்து 55 பேருக்கு தொற்று அதிகரித்துள்ளதாகவும், அதே போல் தொற்று உறுதியாகும் வீதம் 0.52 ல் இருந்து 0.73 ஆகவும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மீண்டும் ஒரு கொரோனா பெருந்தொற்று ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.