மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.18.01.2024.
மத்திய மலைநாட்டில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 3 அடி 2 அங்குலம் குறைந்த நிலையில் உள்ளதாக நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மலையக பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை தொடரும் பட்சத்தில் காசல்ரீ மேல் கொத்மலை கென்யோன் லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
