அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றதனால் முதலாம் தவணையின் முதற்கட்டம் கடந்த மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்தது.
இன்று ஆரம்பமாகும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 8ஆம் திகதி நிறைவடையும். இரண்டாம் தவணை அடுத்த மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகும். கடந்த காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான நாட்களே பாடசாலை நடைபெற்றது. இதனால் இந்த வருடம் டிசெம்பர் மாத நடுப்பகுதி வரை பாடசாலைகளை நடத்துவதற்கும் கல்வியமைச்சு எதிர்பார்த்துள்ளது.