எரிவாயு விலை மறுசீரமைப்பு தொடர்பான சமூக ஊடக செய்திகள் பொய்யானவை என LITRO Gas Lanka Limited தெரிவித்துள்ளது. மேலும் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புதன்கிழமை (8) வரை விநியோகிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார். போதிய கையிருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயு கொண்டு வரும் சரக்குக் கப்பல் விரைவில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.