புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்து வெளிநாட்டு பிரஜை ஒருவர் காயமடைந்துள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பொடி மெனிகே புகையிரதத்தில் இருந்து தவறி கீழே விழுந்து குறித்த நபர் காயமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த நபர் 29 வயதுடைய ஈரான் நாட்டு பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வெளிநாட்டு பிரஜையை குறித்த புகையிரதத்தில் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 1990 உயிர் காவு வண்டியில் தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது.
