இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ஜகத் பிரியங்கர நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, பிரியங்கர விமல் வீரவங்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் மாவட்டத் தலைவராக இருப்பதால், அவர் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில் அமர இருப்பதால் அரசாங்கம் ஒரு ஆசனத்தை இழக்கும்.

