பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்தூவ, பிரதிப் பொலிஸ் மாஅதிபராக (DIG) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதுவரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக அவர் கடமை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய, பதில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனினால் அவர் இப்பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
2024 ஜனவரி 08ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவி அமுலுக்கு வருவதாக, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் குற்றப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்தும் செயற்படுவார் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
