மடுல்கலை நிருபர்
கண்டி உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 வது குடியரசு தின நிகழ்வுகள் கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகர் உத்தியோக வாசஸ்தளத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் உதவி இந்திய உயர்ஸ்தானிகர்
ஆதிரா அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதையும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் மனித வள அபிவிருதி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி பிரமுகர்களையும் படத்தில் காணலாம்.


