எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் அங்கு இருக்கக்கூடிய எரிபொருள் வகைகளை எளிதாகக் அறிந்து கொள்வதற்கான முறையொன்று அறிமுகம் எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் அவற்றில் இருக்கக்கூடிய எரிபொருள் வகைகளை எளிதாகக் அறிந்து கொள்வதற்கான முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் , அவற்றிலுள்ள எரிபொருள் வகைகள் மற்றும் அவற்றின் இருப்பு முதலானவற்றை அறிந்துகொள்ள முடியும். தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தினால் (ICTA) முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த எரிபொருள் முகாமைத்துவ கட்டமைப்பு ஊடாக நாடு முழுவதிலும் இடம்பெறும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மிக இலகுவாக முகாமைத்துவப்படுத்தப்படுவதுடன் அந்த தகவல்களை பொது மக்கள் இலகுவாக அறிந்துகொள்வதற்கு வசதிகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தேவையற்ற வரிசைகள் ஏற்படுவதைப் போன்று பாவனையாளர்களின் நேரத்தை சேமிப்பதற்கும் முடிவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம், எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டத்தினால் ,பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுமைகளை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முதல் கட்டத்தின் கீழ் , நாளாந்தம் எரிபொருள் விநியோகம் தொடர்பான தகவல்கள் , எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் தகவல்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்பு உண்டா முதலான தகவல்கள் உள்ளடக்கப்படும்.
இந்த தகவல்களை அறிந்துகொள்வதற்கு fuel.gov.lk என்ற இணைய தளத்தில் பிரவேசிப்பது அல்லது கையடக்க தொலைபேசி ஊடாக SMS மூலம் பிரவேசிக்க முடியும். இதற்காக முதலில் இணையதளத்தில் பிரவேசிப்பதற்கு அமைவாக எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் குறியீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். SMS மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளுவதற்காக :
கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறை
1. படி:01: 1919 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு FUEL , குறுஞ் செய்தியை அனுப்ப வேண்டும்.
2. படி:02: எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடியமை தொடர்பில் உங்களுக்கு பின்வரும் தகவல்களைக்கொண்ட SMS தகவல் ஒன்று அனுப்பப்படும். • எரிபொருள் நிறப்பும் நிலையத்தின் பெயர்
• எரிபொருள் நிலையத்தின் தொலைபேசி எண்.
• பெறக்கூடிய எரிபொருளின் அளவு:
• P92 – (கொள்திறன்), • P95 – (கொள்திறன்), • D- (கொள்திறன்), • SD- (கொள்திறன்) , • மண்ணெண்ணெய் -(கொள்திறன்).
• பவுசர்கள் அனுப்பி வைக்கப்பட்ட திகதி மற்றும் நேரம் எரிபொருள் தொடர்பான விவரங்கள்
• இறுதியாக தகவல்கள் முழுமைப்படுத்தப்பட்ட திகதி மற்றும் நேரம். இந்த கட்டமைப்பின் இரண்டாவது கட்ட நடவடிக்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் , பொது மக்களுக்கு டோக்கன் ஒன்றை வழங்கக்கூடியதாக இருக்கும். அதேபோன்று பொது மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு பங்களிப்பு செய்யக்கூடியதாக இருக்கும்.
மேலதிக விவரங்கள் மற்றும் கேள்விகள் பதில்களை feul.gov.lk என்ற இணையதளத்தில் பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.