Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வடக்கு கிழக்கில் உதிக்கிறது சூரியன்
இலங்கை

வடக்கு கிழக்கில் உதிக்கிறது சூரியன்

ThanaBy ThanaFebruary 2, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் எனும் காற்றை சுவாசித்த எமது நாடு அதன் பின்னரான நான்கு தசாப்தங்களாக முகங்கொடுத்த யுத்தத்திலிருந்து மீண்டு ஆறுதல் அடைந்தாலும் கூட பூரணமாகத் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளையோ அல்லது தேவைகளையோ நாம் காணக் கூடியதாக இருந்தது.

இவ்வாறான கால கட்டத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சை பொறுப்பேற்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களினால் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் தற்போது நன்றாக அபிவிருத்தி அடைந்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் முக்கியமான ஒன்றுதான் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியயேற்றுதல் ஆகும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றி அவர்களுக்குத தேவையான நிவாரணங்களை வழங்கி மக்கள் வாழ்வை மேம்படுத்தக்கூடிய செயல் திறனான பயனுள்ள அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் கௌரவமான பாதுகாப்புமிக்க மக்கள் சமூகம் ஒன்றை உறுதிப்படுத்தல் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

அதில் முக்கியமான திட்டமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு கல் மற்றும் சாந்தைப் பயன்படுத்தி நிரந்தர வீடை நிர்மாணிக்கும் வேலைத் திட்டத்தைக் கூறலாம்.

அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 27,322 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28,619 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 29, 762 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 23,068 வீடுகளும் மன்னார் மாவட்டத்தில் 16,227 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 10,039 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,098 வீடுகளும் அம்பாறை மாவட்டத்தில் 1,713 வீடுகளுமாக மொத்தம் 148,848 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த நிரந்தர வீடமைப்புத் திட்டத்தில் பயனாளர்களினால் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும். இதற்கான கண்காணிப்பு மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு பிரதேச செயலக்த்துடன் இணைந்து பணியாற்றும் தொழிநுட்ப அதிகாரியினால் வழங்கப்படும்.

இந்த செயற்றிட்டத்தின் கீழ் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 600,000 ரூபாயும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 1,000,000 ரூபாயும் வழங்கப்படும்.

அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் 7,671 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 952, முல்லைத்தீவு மாவட்டத்தில் 223 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 2,183 வீடுகளும் மன்னார் மாவடத்தில் 526 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 3,500 வீடுகளும் மட்டக்களப்பு 3,214 வீடுகளும் அம்பாறை மாவடத்தில் 2,007 வீடுகளுமாக நிர்மாணிக்க வேண்டிய வீடுகளின் மொத்த எண்ணிக்கை 20,276 ஆகும்.

2024 ஆம் ஆண்டில் இந்த செயற்றிட்டத்திற்காக 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு 600 ,000 ரூபாய் பெறுமதியான 833 வீடுகளும் 1,000,000 ரூபாய் பெறுமதியான 1000 வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 694 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 86 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 197 வீடுகளும் மன்னார் மாவட்டத்தில் 48 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 316 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 291 வீடுகளும் அம்பாறை மாவட்டத்தில் 181 வீடுகளுமாக மொத்தம் 1,833 வீடுகள் 2024 ஆம் ஆண்டில் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டாவது செயற்றிட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை கூறலாம்.

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிரந்தர வீடு நிர்மாணிக்கும் செயற்றிட்டத்திற்கு சமாந்தரமாக அவர்களை மீள்குடியேற்றும் போது அத்தியாவசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் செயற்றிட்டங்கள…

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.