மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.04.02.2024.
மஸ்கெலியா வலய பொலிஸ் பிரிவில் உள்ள ஏ.ஸ்.பி.ஜயசிங்க தலைமையில் இன்று மதியம் மஸ்கெலியா நகரில் உள்ள பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ், எஸ், புஷ்பகுமார மற்றும் ஏழு பிரிவுகளில் பொருப்பான பொலிசார், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சட்டத்தின் உறுப்பினர்கள் கிராம உத்தியோகத்தர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய எஸ், எஸ்,பி.ஜயசிங்க மிகவும் அமைதியான சூழலில் உள்ள மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் நாம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
அத்துடன் எமது பகுதியில் உள்ள 21 தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் உள்ள பகுதிகளில் போதை மாத்திரை வாசனை பாக்கு புகையிலை மது விற்பனை இவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும் ஆகவே நாம் ஒவ்வொருவரும் முன் வந்து எமது பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைக்கு அருகில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் அங்காடிகள் பற்றிய தகவல்கள் எமக்கு வழங்க வேண்டும்.
அத்துடன் நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு திட்டம் பொலிஸ் மா அதிபர் தற்போது நடைமுறை படுத்தி உள்ளார் நாளாந்தம் விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகின்றனர் எமது பகுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் மற்றும் இளைஞர்கள் இவ்வாறான போதைப் பொருட்கள் பாவனையில் இருந்து தடுப்பதற்கு எம்மால் முடிந்தளவு பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அனைத்து தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார தனது பொருப்பில் உள்ள பகுதிகளில் இவ்வாறான போதைப் பொருட்கள் இல்லை இனியும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான சம்பவம் தொடர்பாக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.




