மாகொல முஸ்லிம் சிறுவர் மேம்பாட்டு நிலையத்தின் ஆரம்ப கால மாணவரும், அந்த நிலைய பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவருமான எம். சீ. எம் சியாமை கௌரவிக்கும் நிகழ்வு அன்மையில் இடம்பெற்றது.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மாகொல முஸ்லிம் சிறுவர் மேம்பாட்டு நிலையத்தின் பழைய மாணவர் சங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்து, செயற்குழு உறுப்பினராக செயற்பட்டு ஆதர்வற்ற சிறுவர்களின் நலனுக்காக உழைத்தமைக்காக இந்த்த கெளரவிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பழைய மாணவர் சங்க செயற்குழு தலைவர் எஸ்.எம் அஸ்வர், செயலாளர் முனவ்வர், முன்னாள் தலைவர் இல்யாஸ் பாபு, நிர்வாக சபை உறுப்பினர் எம்.ஸீ.எம் முஸப்பர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஆரம்ப காலத்தில் இருந்தே அரசியல், சமூக சேவை போன்றவற்றில் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்ட எம். சீ. எம் சியா , பல வருடங்களாக மகரஹம புற்றுநோய் வைத்தியசாலை ( அபக்ஷா) செயற்குழு உறுப்பினராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

