Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம்
இலங்கை

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம்

ThanaBy ThanaFebruary 15, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், தகுதிபெறும் அனைவருக்கும் எவ்வித தடங்கலும் இன்றி அஸ்வெசும பலன்கள் கிடைக்குமெனவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும முதற்கட்டத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத குடும்பங்களுக்கும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தும் வீட்டுத் தகவல் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத எந்தவொரு நபர்களும் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (15) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் 24 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முடிந்தவரை உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம் நன்மைகளை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட அவர், விண்ணப்பிக்கையில் கட்டாயம் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டைகள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம், ஆட்பதிவுத் திணைக்களத்தினால் பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அஸ்வெசுமவின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பத்தை ஒன்லைன் முறையிலும் கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலகத்தின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் www.wbb.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய முடியும்.

இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கான மாதிரி விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்கள் அல்லது சிவில் அமைப்புகளின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப்படிவங்களை எக்காரணம் கொண்டும் பணம் செலுத்தி வாங்க வேண்டிய அவசியம் கிடையாது.

முதற்கட்டமாக விண்ணப்பித்து அஸ்வெசும நன்மைகளைப் பெறத் தகுதி பெறாதவர்களும், மேல்முறையீட்டு விசாரணையில் பங்கேற்காதவர்களும் தங்களின் தகவல்களை மீள் சான்றுபடுத்த வாய்ப்பு வழங்கப்படும்.

அஸ்வெசும தொடர்பான மேலதிக தகவல்களை, 1924 எனும் அவசர எண்ணின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.