ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் மில்லகாமுல்ல பிரதேசத்தில் பேரூந்து ஒன்றுடன் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரில் பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

