பலாங்கொடை வேலிஓயா பிரதேசத்தில் இருந்து பலாங்கொடை நகரத்திற்கு வருகை தந்த பேருந்தை பரிசோதனை சேய்த போது மரக்கறியோடு
ஒரு கிலோ 90 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் மரக்கறி வியாபாரம் செய்பவர் என்றும் தொடர்ந்து வேலிஓயா பிரதேசத்தில் இருந்து பலாங்கொடை நகரத்திற்கு தொடர்ந்து மரக்கறி வியாபாரத்திற்காக வருவதாகவும் இவர் கொண்டுவந்து கத்தரிக்காய் உறைக்குள் கத்தரிக்காய் உடன் மறைத்து கொண்டுவந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒரு கிலோ 90 கிராம் கேரள கஞ்சாவை பலாங்கொடை காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
