சாமிமலை பிரதான வீதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட முச்சக்கர வண்டி சாரதி என நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புரவுன்ஷீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இருந்து இன்று காலை பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி மஸ்கெலியா நகருக்கு அருகில் உள்ள சாமிமலை பாலத்தை அன்டிய பகுதியில் பாரவூர்தியில் மோதுண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மாணவிகள் இருவர் மாணவர் ஒருவரோடு முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.
குறித்து மாணவ, மாணவிகள் இன்று க.பொ.த.உயர் தரம் கற்றுக் கொள்ள பாடசாலை அனுமதிக்காக கிராம உத்தியோகத்தர் கடிதம் பெற்று கொள்ள கிராம உத்தியோகத்தரை சந்தித்த பின்னர் புளூம்பீல்ட் தமிழ் வித்தியாலயத்திற்கு சென்று கொண்டு இருந்த நிலையிலே குறித்து விபத்து இடம்பெற்று டுள்ளது.
விபத்து சம்பந்தமாக மஸ்கெலியா பொலிஸ்சார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மஸ்கெலியா செய்தியாளர்.
செ.தி.பெருமாள்.21.02.2024
