Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாமியாரை கொலை செய்த 30 வயது மருமகன்
இலங்கை

மாமியாரை கொலை செய்த 30 வயது மருமகன்

ThanaBy ThanaFebruary 24, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று (23) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழசைசேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகளுக்கு திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் அவரது கணவன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருமகன் மதுபோதையில் மாமியாருடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மாமியார் வீட்டில் தனிமையில் இரந்துள்ள போது மது போதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, மாமியாரின் தலை மீது பாரிய பொருள் ஒன்றால் தாக்கியதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.

பின்னர், 30 வயதுடைய மருமகன் அங்கிருந்து தப்பிஓடியுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அயவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.