கம்பளை கண்டி பிரதான வீதியில் கெலிஒயா பகுதியில் பஸ் வேன் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது,
பேராதெனிய பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட கெலிஒயா பெற்றோல் நிரப்பு நிலையத்திற்க்கு முன்பாக உள்ள வலைவில் பஸ் மற்றும் வேனுடன் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அனுராபுரத்தில் இருந்து ஹட்டன் சிரிப்பாதமலைக்கு யாத்திரை வந்த குழுவினரும் புசல்லாவை பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேணும் நேருக்கு நேராக மோதி இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.
பஸ்ஸில் சிறு பிள்ளைகளுடன் பயணித்துள்ளர், தெய்வாதீனமாக உயிர் தப்பித்தனர் இருவருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது
மேலதிக விசாரணை பேராதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,



