Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

September 20, 2026

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

September 20, 2026

அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

September 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » காலி – அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரம் சிவன் திருக்கோயில்
கோவில்

காலி – அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரம் சிவன் திருக்கோயில்

ThanaBy ThanaJanuary 9, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தென்மாகாணம்- காலி மாவட்டம்- காலிமாநகர்- அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரம் சிவன் திருக்கோயில்

தென்னிலங்கைக் கரையினிலே கோயில் கொண்ட சிவனே
திக்கெல்லாம் உன்னருளைப் பரப்பிடவே வருவாய்
கல்லான மனங்களையும் கரைய வைக்கும் கோவே
காலி மாநகரிருந்து கருணை செய்வாய் ஐயா

அலை கடலின் கரையிருந்து அருள் வழங்கும் சிவனே
அருளளித்து அரவணைத்துக் காத்திடவே வருவாய்
மலைமகளின் அருளுடனே வாழ்வளிக்கும் கோவே
மலரடியைப் போற்றுகின்றோம் வந்திடுவாய்

தமிழ் மொழியைத் தரணிக்குத் தந்திட்ட சிவனே
தரணியிலே தமிழர் நிலை உயர்ந்திடவே செய்வாய்
உயிருக்குள் உயிராக உள்ளிருக்கும் கோவே
உயர்வு தந்து நலமளித்து வாழச் செய்வாய் ஐயா

சுடலையிலே ஆடுகின்ற பேரருளே சிவனே
சித்தமெல்லாம் சீரடையும் பெருமையை நீ தருவாய்
உறுகுணையில் குடியிருக்கும் உத்தமனே கோவே
உறுதி தந்து வாழ்வளிக்க வந்திடுவாய் ஐயா

பாண்டியனின் இலச்சினையைக் கொண்ட எங்கள் சிவனே
பாசமுடன் உன்னடியைப் பணியுமெம்மைக் காப்பாய்
வானவர்கள் போற்றுகின்ற மாசறுக்கும் கோவே
வந்தணைத்து அருளிடவே விரைந்திடுவாய் ஐயா

மீனாட்சி சுந்தரரெனப் பெயர் கொண்ட சிவனே
மீட்சி பெற்று நாம்வாழ நின்னருளைத் தருவாய்
கதிர்காமக் கந்தனைத் தந்திட்ட கோவே
காவல் செய்து எமக்குத்துணை இருந்திடுவாய் ஐயா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா* 

    September 17, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Editors Picks

    மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

    September 20, 2026

    கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026

    Mவிக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்!

    September 20, 2026

    மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

    September 20, 2026

    கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.