இன்று கண்டியில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூகமகே அலுவலகத்திற்கு முன்பாக மத்திய மாகாண 136 உதவி ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்யுமாறு கூறி போராட்டம் செய்தனர்,
பல முறை கூறி இதுவரை இன்னும் நியமனம் செய்யாமல் இருப்பதால் இன்று ஆளுநர் அலுவலகத்தில் முன்பாக உதவி ஆசிரியர்கள் இன்று போராட்டம் செய்தனர்,
இது தொடர்பாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து அந்த இடத்திற்கு உடனடியாக மலையக பிரதிநிதி பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் சென்று ஆளுநர் உடன் கலந்துரையாடிய பின்,
வெளியில் வந்து உதவி ஆசிரியர்கள் போராட்டம் செய்த இடத்திற்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் கலந்துரையாடினார்,
இதன் போது வேலுக்குமார் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடனும் திரைசேரி உடனும் அவசியமான கலந்துரையாடலும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் ,
அதே நேரம் ஆசிரியர் உதவியாளர்களுக்கு நடந்து இருப்பது பாரிய அநிதி என்றும் இது முழுமொத்த மலையக மக்களுக்கும் செய்யப்படுகின்ற பாராபட்சம் அநிதி என்றும் மேலும் தெரிவித்தார்,


