மீகஹகிவுல- களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் .
குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் மாணவியை உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹியங்கனை பூஜா நகரைச் சேர்ந்த 32 வயதுடைவர் என தெரியவருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி இன்று (06) பதுளை சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அதேநேரம் சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
