Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

August 14, 2026

வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

August 14, 2026

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் துரிதமாக வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதியின் பணிப்புரை
இலங்கை

கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் துரிதமாக வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதியின் பணிப்புரை

ThanaBy ThanaMarch 8, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் வீடுகள் வழங்கும் கொள்கைகள் மற்றும் அளவுகோல்களுக்கு அமைவாகவே இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அறிவித்தார்.

கொழும்பு கஜிமாவத்தை வீட்டுப் பிரச்சினை தொடர்பில்  (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கொழும்பு மாநகரப் பகுதிக்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத கட்டடங்கள் மற்றும் காணிகள் தொடர்பில் ஆராய்ந்து அந்த காணிகளை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அரச துறையின் தலையீட்டுடன் தனியார் முதலீடுகள் ஊடாக இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு நகர எல்லையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும், அரசாங்க வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, மேலும் வீடமைப்புத் திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.

அத்துடன், தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் இந்தப் பணிகள் சிரமமானதாக இருந்தாலும் பொருத்தமானமுறைமையைத் தயாரிக்குமாறு சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறி, கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன மற்றும் துறைசார் நிறுவன அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

    August 14, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.