மடுல்கலை நிருபர்
ஒன்பது இலட்சத்துக்கும் அதிகமானோர் இன்று பெருத்தோட்ட பகுதிகளில் வாழ்ந்துவரும் நிலையில் ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் நேரடியாக பெருத்தோட்ட தொழித்துறையில் பங்களிப்பு செய்துவருகின்றார்கள் அதிலில் 61% பெண்களே ஆவர் . கடந்த காலங்களை விட தற்போது சுகாதாரம் மற்றும் போஷாக்கு மட்டத்தை பாதுகாப்பதில் நாம் பல முன்னேற்றகரமான திட்டங்களை மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் நாம் மேற்க்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் ஜனாதிபதி செயலகத்தின் ஸ்கேலிங் அப் நியூட்ரிஷன் நிறுவனத்தின் இணைந்து பெருத்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் பெருந்தோட்ட கம்பெனிகளின் தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடனான ஆய்வுரை இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வேலைத்தளத்தில் அவர்களின் உரிமை மற்றும் நலன்புரி விடயங்களில் மேற்க்கொள்ள வேண்டிய முன்னேற்றகரமான முன்மொழிவுகளை சமர்பித்தார். உலக சுகாதார ஸ்தாபனம், பெருத்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
இத்தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனவே அவர்களை வலுப்படுத்துவது எமது தலையாய பொறுப்பாகும்.



