பேரூந்தில் இருந்து விழுந்து பெண் உயிரிழப்பு.
கொழும்பு பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் இருந்து விழுந்து பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை கெமுனுபுர பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய
பொடிமெனிக்கே என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பெண் பானதுறை பிரதேசத்தில் இருந்து மஹியங்கனை பிரதேசத்தைச் நோக்கி செல்லும் பேரூந்தில் பலாங்கொடை மாமல்கஹ பிரதேசத்தில் இருந்து உறவினர்களுடன் பேரூந்தில் ஏறிய பெண் பின்புற ஆசனம் ஒன்றில் அமர சென்றபோது பின்புற கதவால் வெளியே விழுந்துள்ளார்.குறித்த பெண்ணை பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதித்த பின்னர்
அவர் உயிரிழந்தார்.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
