அடுத்த மாத முதல் வாரமளவில் இரண்டு எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாக லிற்றோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஓமானில் இருந்து வரும் இந்த இரண்டு கப்பல்களில் 25 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கியுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து எரிவாயு கப்பல்களுக்கு மேலதிகமாக தொடர்ச்சியாக 4 மாத காலத்திற்கு இலங்கைக்கு எரிவாயு கிடைக்கவிருப்பதாகவும் லிற்றோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டார்.