மத்தியமாகாணம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா கிராப்பு தோட்ட கங்கேவத்தை பிரிவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் நூதன பிரதிஸ்ட பஞ்சகுண்டபக்ஷ மஹா குடமுழுக்கு விழா நேற்று 20 ம் திகதி காலை 10 மணிக்கு வரும் சுப வேளையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு புண்ணியாகவாஜனம், ஆசாரிய விசேட சாந்தி, அலங்கார தீபாரதணை இடம்பெற்று ஸ்ரீ முத்துமாரிய.மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது கங்கேவத்தை மக்கள் உட்பட மஸ்கெலியா பகுதியை சேர்ந்த அனைத்து தோட்ட பகுதி நகர பகுதி கிராம பகுதிகளில் உள்ள ஏராளமான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா- விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.20.03.2024.






