Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

August 10, 2026

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

August 10, 2026

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 136 உதவி ஆசிரியர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு
Breaking

136 உதவி ஆசிரியர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு

ThanaBy ThanaMarch 22, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஆசிரிய சேவையை வெறும் தொழிலாக பார்க்கமல் எமது எதிர்கால தலைமுறையினரை வழுப்படுத்தும் ஒரு சேவையாக வழங்கி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்)

மத்திய மாகாணத்தில் பல காலமாக இழுபறியில் இருந்த 136 உதவி ஆசிரியர்கள் இன்று (22.03.2024) நிரந்தர ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டனர்.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் ஆகியோரின் வேண்டுக்கோளுக்கமைவாக, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் இதற்கான நியமன கடிதங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை ஆகியன காரணமாக இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் பல இழுபறி நிலைமைகள் மற்றும் அவர்களால் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில் சில குளறுபடிகள் காரணமாகவும் நியமனம் வழங்குவதில் இந்த தாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் ஆகியோரின் நேரடி தலையீட்டின் காரணமாக 136 ஆசிரியர்களுக்கு நியமன கடிதங்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் கருத்து தெரிவித்ததாவது,

மலையகத்தில் பெரும் தலைவரமான மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமான் இருந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்கள் பல்வேறு சவால்களையும் தாண்டி அவர்கள் ஆசிரிய தேவைக்கு உள்வாங்கப்பட்டார்கள். இருப்பினும் இன்னும் 270 ஆசிரியர்களுடைய ஆவணங்கள் முறையாக இல்லாமல் இருப்பதன் காரணமாக அவர்களுடைய நியமனங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களின் ஆவணங்களை சரி செய்து விரைவில் அதற்கான நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆட்சி காலத்தில் பொறுப்பு வாய்ந்தத்துறை அமைச்சராக இருந்தும் இதற்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்காமல் தற்போது பெயர் போடும் அரசியலில் சிலர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இவ்வேளையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானும், நானும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமியும் தொடர்ச்சியாக ஆளுநரிடம் கலந்துரையாடி அழுத்தங்களை கொடுத்ததன் காரணமாகவும், ஆளுநரின் நேரடி தலையீட்டின் காரணமாகவும், மத்திய மாகாண பிரதம செயலாளர் மற்றும் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் இடைவிடாத உழைப்பின் காரணமாக இந்த நியமன கடிதங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பங்களிப்பு வழங்கிய அரசியல் தலைமைகளுக்கும், அதிகாரிகளும் மற்றும் நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், இந்த ஆசிரிய சேவையை வெறும் தொழிலாக பார்க்காமல் எமது எதிர்கால தலைமுறையினரை வழுப்படுத்தும் ஒரு சேவையாக வழங்கி மாற்றத்தை ஏற்படுத்துமாறு கேட்டக்கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஷ்வரன், கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான குணதிலக்க ராஜபக்ச, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி பணிப்பாளர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026
    Editors Picks

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.