அரச ஊழியர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் Talent Show எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய அவர்களின் அழைப்பின் பேரில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில், இந்த Talent Show நிகழ்ச்சி அண்மையில் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன ஊழியர்கள் தமது திறமைகளை காட்டினர்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள், பொது முகாமையாளர்கள், பணிப்பாளர் நாயகங்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்


