பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெயிகஸ்தலாவ பிரதேசத்தில் தனியார் ஒருவரின் காணியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின் உதவியை காவற்துறையினர் கோரியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
