இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
Sylhet சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இலங்கை அணிக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பளித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணி தலைவர் தனஞ்சய டீ சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 102 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக கஹலேட் அஹமட் ,நஹிட் ரணா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தைஜூல் இஸ்லாம் 47 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக விஸ்வா பெரெண்டோ 4 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித , லஹிரு குமார தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்படி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 418 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 164 ஓட்டங்களையும், அணியின் தலைவர் தனஜய டீசில்வா 108 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மெஹந்தி ஹாசன் மிராஸ் 04 விக்கெட்டுக்களையும், நாகிட் ராணா மற்றும் தாஜுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் 510 ஓட்டங்களை பெறும் முனைப்பில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன் அடிப்படையில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக Mominul Haque ஆட்டமிழக்கமால் 87 ஓட்டங்களை பெற்று இருத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக கசுன் ராஜித 5 விக்கெட்டுக்களையும், விஸ்வ பெரெண்டோ 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.