பாக்கிஸ்தானில் நடைபெறும் 3 ஆவது சர்வதேச குத்துசண்டை போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து 15 போட்டியாளர்கள் பாகிஸ்தானை சென்றடைந்துள்ளனர்.
கடந்த கடந்த 27 ஆம் திகதி பயணமான இந்த போட்டியாளர்களில் வவுனியாவை சேர்ந்த செல்வி டிலக்சினி கந்தசாமியும் இடம்பெற்றுள்ளார். தந்தையை இழந்த நிலையில் பெரும் கஷ்டத்திற்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியின் காரணமாக இந்த வாய்ப்பினை பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.