தெஹியத்தகண்டி மஹியங்கனை வீதியின் மில்லத்தேவ பகுதியில் இன்று (27) காலை 9.30 மணியளவில்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து
ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹி அட்டகண்டிய டிப்போவிற்குச் சொந்தமான பேருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது காலை 9.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்
5 வயது குழந்தை உட்பட மேலும் இருவர் மொத்தமாக மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கிராதுருகொட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிராதுருகொட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுதேஷ் சதுரங்க தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
