போதிய மழையின்மை காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் மழையின்மை காரணமாக தேசிய நீர்மின்சார அமைப்புக்கு சொந்தமான மவுஸ்சாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இன்று (27) காலை 06.00 மணி நிலவரப்படி, மவுஸ்சாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முறையே 31 அடியாகவும், 26 அடியாகவும் நிரம்பி வழியும் மட்டத்திலிருந்து குறைந்துள்ளதாக, அந்த நீர் தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
லக்ஷபான நீர் மின்சார அமைப்பின் கீழ் உள்ள லக்ஷபான, நியூ லக்ஷபான, கெனியன், பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் ப்ரோட்லேண்ட் ஆகிய 06 மின் உற்பத்தி நிலையங்கள், தேசிய நீர்மின்சார அமைப்பின் கீழ் உள்ள 06 மின் உற்பத்தி நிலையங்களுக்கு முக்கியமாக மவுஸ்சாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் விநியோகிக்கப்படுகிறது.
மவுஸ்சாக்கலை நீர்த்தேக்கத்தின் கீழ் இருந்த பழைய மஸ்கெலியா நகரில் உள்ள ஸ்ரீ சண்முகநாதர் இந்து ஆலயத்தின் முழு தோற்றம் மற்றும் கருங்கள் பாலம் புத்தர் சிலை இஸ்லாமிய பள்ளியின் தூபி என்பன தற்போது மீண்டும் தெரிவதோடு காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் எவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை புகைப்படங்கள் காட்டுகின்றன.
மவுஸ்சாக்கலை,காசல்ரீ படங்கள்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.27.0


