லைக்கா ஞானம் நிறுவகத்தின் கண்டி கிளையில் சர்வதேச நீர் தினத்தை கொண்டாடும் முகமாக 26 மார்ச் மாதம் 2024 அன்று சித்திரப் போட்டி ஒன்று நடாத்தப்பட்டது.
குறித்தபோட்டியில் கண்டிப் பிரதேசத்தை பிரநிதித்துவப்படுத்தி ஐந்து மேற்பட்ட பாடசாலைகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு நடத்தப்பட்ட சித்திரப் போட்டி லைக்கா நிறுவனத்தின் கண்டி கிளையின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது மாணவர்களுக்கான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதோடு, கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டன.












