- கலஹா பகுதியில் நேற்று இரவு விஷேட அதிரடி படையினர் மீட்ட துப்பாக்கி
கம்பளை விஷேட அதிரடிபடை நிலைய பொறுபதிபதிகாரி ஊட அரம்பதேவ மற்றும் இரண்டாவது பொறுபதிபதிகாரி ஸ்ரீவர்தன் அதிகாரிகள் நேற்று இரவு திடீரென யுத்திய எனும் வேளைத்திட்டதின் கலஹா பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ நுவரெலியா பிரதான வீதியில் ஆயுர்வேத எனும் பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு அவசர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனுமதி பத்திரம் இல்லாமல் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் முச்சக்கரவண்டி ஆகியவை விஷேட அதிரடி படையினர் மீட்டுள்ளனர்,
32.50 மற்றும் 48 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கலஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கம்பளை விஷேட அதிரடி படை அதிகாரிகளான ஸ்ரீ வர்தன மற்றும் குமார அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பில் கலந்துகொண்டனர்.