சிறுநீரக நோயாளியின் பெயரில் நிதி மோசடியில் ஈடுபட்ட நால்வர் பலாங்கொடையில் கைது.
மாத்தறை ஹிஹகொட பிரதேசத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்து மக்களிடம் வஞ்சகமாக பணம் சேகரித்த மூன்று பெண்கள் உட்பட ஆண் ஒருவரையும் பலாங்கொடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்
கடுவான, மாத்தறை,பெலிஅத்த,மற்றும் திஹகொட பிரதேசங்களைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு பெண்ணின் தலைமையில் நான்கு பேரும் முச்சக்கர வண்டியிலே பலாங்கொடை நகரத்தில் பணம் சேகரிக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சேகரிக்கும் பணத்தில் முச்சக்கர வண்டியை செலுத்தும் நபருக்கு ஒரு நாளைக்கு நான்காயிரம் ரூபாயும் ஒரு நாளைக்கு பெண் ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபாயும் வீதம் சம்பளம் வழங்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 26000.00 ரூபாய் இரண்டு பெண்களுக்கு கொடுக்கப் சம்பளம் 18500.00 ரூபாய் உட்பட மேலதிகமாக 20400.ரூபாய் மொத்தம் 64900.00 ரூபாய் மற்றும் முச்சக்கர வண்டியையும் பலாங்கொடை பொலிஸார் கைபற்றி உள்ளனர்.கைது செய்யப்பட்ட பணம் முச்சக்கர வண்டி.மற்றும் சந்தேக நபர்களை பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் படுத்த உள்ளனர்.
M.F.M.Ali
