கடந்த 03/04/2024 அன்று ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சித் தலைவர் மௌலவி சதீக் முப்தியின் அழைப்பை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்தஇந்திய தேசிய லீக்கின் தமிழ்நாட்டு மாநிலத்தின் செயலாளர் முகமது கான் அவர்களுக்கும் வெகுசன ஊடக மற்றும் தபால் சேவைகள் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார அவர்களுக்கும் சமகால அரசியல் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன் போது இலங்கை மாணவ, மாணவிகளுக்கு இந்திய மருத்துவ கல்லூரிகளில் கல்வி கற்க புலமை பரிசில் வழங்குவதாகவும், வடகிழக்கு முஸ்லிம்களின் மீழ் குடியேற்றத்துக்கு வீட்டுத்திட்ட உதவி திட்டத்திற்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க இலங்கைக்கு இந்தியா தயாராக உள்ளதாகவும் இந்திய தேசிய லீக்கின் தமிழ்நாட்டு மாநிலச் செயலாளர் முகமது கான் தெரிவித்தார்.
அத்துடன் இனம் மதம் பாராது சமூக சேவை செய்யும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெகுசன ஊடகம் மற்றும் தபால் சேவை ராஜாங்க அமைச்சர் கௌரவ சாந்த பண்டார அவர்களை இந்திய தேசிய லீக்கின் தமிழ்நாட்டு மாநில செயலாளர் முகமது கான் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் அருகில் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் மௌலவி சதீக் (முப்தி) நிற்பதையும் படங்களில் அவதானிக்கலாம்.
