அனுமதி பத்திரம் இல்லாமல் மாட்டு இறைச்சி விற்பனைக்கு ஆக வைத்து இருந்த இருவர் விஷேட அதிரடி படையினரால் நேற்று இரவு கைது.
கம்பளை விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த சூற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கொத்மலை மாஸ்வெல மாவில பகுதியில் உள்ள எருமை மாடு மற்றும் வீடுகளில் வளர்க்கும் மாடுகள் நீண்ட காலமாக காணாமல் போய் வந்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் இது தொடர்பாக கம்பளை விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இரவு கம்பளை ஜயமாலப்புர பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் விற்பனை செய்வதற்கு ஆக வைத்து இருந்த மாட்டு இறைச்சி 95 கீழோ மீட்டனர்,
அந்த பகுதியில் மாடுகளை திருடி வெட்டி விற்பனை செய்வதற்கு ஆக ஜயமாலப்புர பகுதியில் உள்ள நபருக்கு வழங்கி வந்துள்ளனர்,இதன் போது விற்பனை செய்து வரும் 43 வயது நபரும் மற்றும் உதவிக்கு இருந்த 27 வயதுடைய கம்பளை ரிவசைட் பிரதேசத்தை சேர்ந்த நபரும் விஷேட அதிரடி படையினர் கைது செய்தனர்,
சந்தேக நபர்களை கம்பளைபொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து மாடுகளை திருடி வரும் கும்பளை தேடி விசாரணை முன்னேடுத்து வருகின்றனர்,
