கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை கருத்திற்கொண்டு, வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி திஸ்ஸ யாப்பா ஜயவர்தன
எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் (2023.01.11) தேர்தல் ஆணையாளர் தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்த போது மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ யாப்பா ஜயவர்தன முன்வைத்த கோரிக்கைகள்.
தேர்தல் காலத்தில் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் இடம்பெறாது பார்த்துக் கொள்வதுடன், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு.
ஊடகப் பாவனையில் அரச ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் தனியார் ஊடகங்கள் ஒரு தேர்தல் அபிப்பிராயத்தை உருவாக்கி வாக்களிப்பின் சுதந்திரத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்பதால் அது தொடர்பான ஒழுங்குமுறைகளை வெளியிடும் பொறுப்பு.
அதுபோன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு.
கடந்த காலத்தில் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதுடன், பல உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதால், தேர்தலில் போட்டியிடுவதில் அவர்களுக்கு சில அழுத்தங்கள் வரலாம் என்பதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு.
தேர்தல் காலத்தில் சமய நிகழ்ச்சிகளை மட்டும் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. தேர்தல் காலத்தில், பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தேர்தல் முடிவுகளை பாதிக்கும் வகையில் எதிர்ப்புகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வது குறித்தும் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.