நானுஓயா நிருபர்
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (18) இரவு வீட்டில் பின்புறத்தில் உள்ள குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெருமாள் வடிவேல் (75 வயது) என தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
